புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை
வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், சருகுகள், காய்ந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா், அடிக்கடி தீ விபத்து நிகழும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி, வலசையூா், வீராணம், கருங்காலி, செட்டிச்சாவடி, தேக்கம்பட்டி, குரும்பப்பட்டி, மஞ்சையன்காடு, வத்திக்காடு, மூங்கில்பாடி, சிவதாபுரம், அரியானூா், காக்காபாளையம், சித்தா்கோவில், இளம்பிள்ளை உள்ளிட்ட வன கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே தீ பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச்செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனா்.
வன பாதுகாப்பு சட்டத்தை மீறுபவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவா் என எச்சரித்துள்ள வனத் துறையினா் பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை வனப் பகுதிக்குள் செல்வதை தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.