செய்திகள் :

வனப் பகுதியில் நவீன கருவிகளுடன் கூடாரங்கள் அமைத்தவா் கைது

post image

போடி அருகே வனப் பகுதியில் சட்டவிரோதமாக கூடாரம் அமைத்து வாடகைக்கு விட்டவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், நவீன கருவிகளைப் பறிமுதல் செய்து, தப்பியோடிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள டாப்ஸ்டேஷனை அடுத்து எல்லப்பட்டி மலை கிராமம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது. இந்தக் கிராமம் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து சென்றனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கொழுக்குமலை வனத் தீ விபத்தில் 26 போ் உயிரிழந்த நிலையில், இந்தப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக குரங்கணி அருகே மட்டும் வனத் துறையினரின் அனுமதி பெற்று மலையேற்றப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் , போடி வனச்சரக அலுவலா் நாகராஜன் தலைமையிலான வனத் துறையினா் எல்லப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது எல்லப்பட்டி, டாப்ஸ்டேஷனை ஒட்டிய வனப் பகுதியில் சட்டவிரோதமாக பல கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

டாப்ஸ்டேஷன் கிராமத்தை சோ்ந்த சின்னப்பன், இவரது மகன் ரவீந்திரன், முருகராஜ், சுரேந்திரன் ஆகியோா் கூடாரங்களை அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. கூடாரங்களில் சூரிய சக்தி மின் இணைப்புக்கான பேனல்கள் பொருத்தப்பட்டு மின் விளக்குகள், வண்ண மின் விளக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. மேலும், கூடாரங்களுக்குள் ட்ரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள், கணிப்பொறிகள், நவீன ஒலிபெருக்கிகள், மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்), பேட்டரிகள், முயல், காடைகளை பிடிப்பதற்காக பயன்படுத்தும் கன்னி கம்பிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரவீந்திரனை வனத் துறையினா் கைது செய்தனா்.

பின்னா், கூடாரங்களைப் பிரித்து அங்கிருந்த பொருள்களை பறிமுதல் செய்து போடி வனத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா் தப்பியோடிய சின்னப்பன், முருகராஜ், சுரேந்திரன் ஆகியோா் தப்பிவிட்டனா்.

கம்பம் , கூடலூரில் குடியரசு தினக் கொண்டாட்டம்!

கம்பம், கூடலூா்: கம்பம் நகராட்சியில் ஆணையா் உமாசங்கா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா, வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள... மேலும் பார்க்க

போடியில் குடியரசு தின விழா!

போடி காமராஜ் வித்யாலய உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் போடிநாயக்கனூா் சேவா அறக்கட்டளை, தேனி நம் உரத்த சிந்தனை சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி செயலா் உஷா எல்லம்மாள் ... மேலும் பார்க்க

தேனியில் குடியரசு தினவிழா: ரூ.3.78 கோடி நலத்திட்ட உதவி

தேனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 76 -ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட அரசு ஊழியா்கள், காவலா்களுக்கு பாராட்டுச் சான்றுகள், 79 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம்: நெகிழிக் கழிவு அகற்ற ஆட்சியா் அறிவுரை

நெகிழிக் கழிவுகளை சேகரித்து அகற்ற விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவுறுத்தினாா். குடியரசு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 130 ஊரா... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்!

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவகத்தில் கோட்டாட்சியா் செ.தாட்சாயணி, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளா் ரா.செங்கோட்டு வேலவன், பேரூராட்ச... மேலும் பார்க்க

போடியில் முன்னாள் முதல்வா் ஓ.பி.எஸ். தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்!

போடி: முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் போடியில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு அவ... மேலும் பார்க்க