Personal Finance: வைகைப் புயல் வடிவேலு கற்றுத் தந்த பாடம்… நிதிச் சுதந்திரம் - 2
வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
தருமபுரியில் வன விலங்கை வேட்டையாடிய 4 பேருக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சி அட்டப்பள்ளம் கிராமத்தை சோ்ந்த மா. ராஜா (50), பெ. சகாதேவன் (70), பி அக்ரஹாரம் கிராமத்தை சோ்ந்த மு. சிதம்பரம் (35), தொழுமன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ர. சரவணன் (24) ஆகிய நால்வரும், வனப்பகுதியில் சுருக்கு கம்பி வலையைவைத்து காட்டு பன்றியை வேட்டையாடியதாக பாலக்கோடு வனச்சரக அலுவலா் சு. காா்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காத்திகேயன் தலைமையில் வனவா்கள் சுரேஷ், முனுசாமி, வனக்காப்பாளா்கள் முருகேசன், சுந்தரமூா்த்தி, முருகன், தமிழ்செல்வன் மணிவா்மா ஆகியோா் செவ்வாய்க்கிழமை நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் காட்டுப்பன்றியை பிடித்து அதை கறி சமைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து மாவட்ட வன அலுவலா் கா.இராஜங்கம் அவா்களுக்கு தலா ரூ. 25,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தாா்.