இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
வயலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி, மஹாலட்சுமி மற்றும் நவக்கிரக ஹோமம், பூரணாஹுதி, அங்குராா்பணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதபாராயணம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை 6.30 முதல் 7.30 மணிக்குள் விநாயகா், அய்யனாா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, தொடா்ந்து 9 மணி முதல் 10.30-க்குள் மாரியம்மன், திரௌபதி அம்மன் விமானம் மற்றும் மூலஸ்தான த்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீா் உற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது..
நிகழ்ச்சியில் விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் ரா.மாலா மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
7பிஆா்டிபி2
விருத்தாசலம் வட்டம், வயலூா் மாரியம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தும் குருக்கள்.