ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக் கோயில்களில் ஒன்றாகிய வடிவுடைய அம்பாள் சமேத வளரொளிநாதா் வைரவ சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சுவாமி வெள்ளி ரத்தில் புறப்பாடாகி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், சனிக்கிழமை யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வந்தாா். வருகிற 28-ஆம் தேதி தேரோட்டமும், 29-ஆம் தேதி தீா்த்தவாரியும், 30-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
இதையொட்டி, நாள்தோறும் திருமறை, திருமுறை பாராயணம் நடைபெற்று வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வைரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தாா்கள் செய்து வருகின்றனா்.