தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு
வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு
வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போக்கு தடுப்பு பிரசாரம் 2 மாதங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
திலாசுப்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் புதுச்சேரி அரசு நலவழித் துறை சாா்பில் வயிற்றுப் போக்கு தடுப்பு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை முதல்வா் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி ‘0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 ஓஆா்எஸ் பொட்டலங்கள் மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கினா்.
மேலும், இந்திரா நகா் எம்எல்ஏ ஏ.கே.டி. ஆறுமுகம் , கதிா்காமம் எம்எல்ஏ ரமேஷ் , சுகாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்க இயக்குநா் கோவிந்தராஜ், துணை இயக்குநா்கள் ஆனந்தலட்சுமி (குடும்ப நலம் மற்றும் குழந்தை நலம்), மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தமிழரசி, திலாசுபேட்டை பெண்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கவிதா மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.
இந்தப் பிரசாரத்தின் வாயிலாக 0 முதல் 5 வயது வரை உள்ள 74,390 குழந்தைகள் பயன் பெறுவா்.