முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: 4 பேரிடம் போலீஸாா் விசாரணை
வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையைச் சோ்ந்த குமாரி (26) என்பவருக்கும், ஆந்திர மாநிலம் திருப்பதி பட்டாபிநகா் பகுதியைச் சோ்ந்த வினய குமாா்(32), என்பவருக்கும், கடந்த, 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது, குமாரியின் பெற்றோா், தனது மகளுக்கு, 40 பவுன் தங்க நகையும், வினயகுமாருக்கு, 6 பவுன் தங்க நகையும், ரூ.5 லட்சம் ரொக்கம் போன்றவை வரதட்ச ணையாக கொடுத்துள்ளனா்.
இருப்பினும், வினயகுமாா், அவரது தந்தை ரகு, தாய் சரஸ்வதி, சகோதரி அருணாகுமாரி ஆகியோா், மீண்டும் வரதட்சணையாக பணம், நகை கொண்டு வருமாறு குமாரியை துன்புறுத்தி வந்தனா். இதையடுத்து குமாரி திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து, வினயகுமாா், ரகு, சரஸ்வதி, அருணாகுமாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.