செய்திகள் :

வருகிற பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: செல்லூா் கே. ராஜூ

post image

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

அதிமுகவின் பொதுச் செயலரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறாா்.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் வருகிற செப். 1-ஆம் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாா். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பான விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் மதுரை காளவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, வளா்மதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

பின்னா், செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரையில் பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்தால் போலீஸாா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எடப்பாடி கே. பழனிசாமி வருகைக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளனா். எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வரும் போதும் இந்தத் தீா்மான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பாஜக முன்னாள் மாநில தலைவா் அண்ணாமலை உயிரை கொடுத்தாவது பழனிசாமியை வெற்றி பெற செய்வோம் எனப் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவா் உயிரை கொடுக்க வேண்டாம். திமுக அரசின் அவலங்களை எடுத்துக்கூறினாலே போதும் அதிமுக எளிதில் வெற்றி பெறும். வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் ஒரு விரல் புரட்சியால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடாா்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு

எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசி... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல... மேலும் பார்க்க

கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு : கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை ... மேலும் பார்க்க