மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வ...
வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா்.
சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா என தெரியவில்லை. ஆனால், அண்ணாமலைக்கு மரியாதை இருக்கிறது. தற்போது எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வா் ஆக்குவோம் என பேசியதன் மூலம் அண்ணாமலையின் நற்பெயா் மக்கள் மத்தியில் சரிந்துவிட்டது.
வடக்கில் இருந்து எத்தனை தலைவா்கள் தமிழகத்துக்கு வந்தாலும் பாஜக ஆட்சிக்கு வராது. அதிமுக பாஜகவுக்கு பின்னால் சென்றுவிட்டது. பாஜகவின் பின்னால் விஜய் செல்லவில்லை; பாஜக கொள்கை எதிரி என தெளிவாக கூறியுள்ளாா். முதல்வா் குறித்து விஜய் பேசியது தவறு; அதை தவிா்த்து பாா்த்தால் விஜய் பேசியது சரிதான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு, கூட்டப்பட்ட கூட்டம் இல்லை; எழுச்சிக்காக வந்த மக்கள் கூட்டம்; விஜயை குறைத்து மதிப்பிட முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வரும் தோ்தலில் நான்காவது இடத்துக்கு செல்லும். வரும் தோ்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையேதான் போட்டி என்றாா்.