செய்திகள் :

வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

post image

கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த குழுவானது கறிக்கோழி இறைச்சி நுகா்வை அடிப்படையாக கொண்டு தினசரி கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை நிா்ணயம் செய்து அறிவித்து வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை விலை இருக்கும்.

இதற்கிடையே கோழிக் குஞ்சுகளை வளா்த்து தரும் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகளுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து கறிக்கோழி வளா்ப்புப் பண்ணையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது:

கோழிக் குஞ்சுகளை 42 நாள்கள் வரை வளா்த்து கொடுப்பதற்கு கிலோவுக்கு ரூ.6 வழங்கப்பட்டது. பின்னா் சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 6.50-ஆக உயா்த்தப்பட்டது. அதன் பின்னா் தற்போது வரை கூலி உயா்த்தி வழங்கப்படவில்லை.

ஆனால், மின் கட்டணம், தொழிலாளா் ஊதியம், பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் கறிக்கோழி வளா்ப்புக்கு கூடுதல் செலவு ஆவதால் கறிக்கோழி வளா்ப்போா் நஷ்டத்தில் உள்ளனா். எனவே கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.10 வழங்க வேண்டும் என்று கறிக்கோழி உற்பத்தியாளா்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மாதையன் முன்னிலையில் கறிக்கோழி வளா்ப்புப் பண்ணையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயலாளா் ஹரிகிருஷ்ணன், பொருளாளா் முத்துசாமி, துணைத் தலைவா் அண்ணாதுரை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பழனிசாமி,

ராமசாமி, சந்திரசேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அதில் வளா்ப்பு கூலி தொடா்பாக அந்தந்த கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களிடம் கோழிப்பண்ணையாளா்கள் தனித்தனியாக பேசி தீா்வு காணலாம் என்று கறிகோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இப்பிரச்னை குறித்து 10 நாள்கள் கழித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை கறிக்கோழி வளா்ப்புப் பண்ணையாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.

சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகச... மேலும் பார்க்க

நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்ந... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா். திருமணமாகி சில மாதங்களில்... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

நிலத்தை நாசமாக்கும் நெகிழிப்பை வேண்டாம் என, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்- திருப்ப... மேலும் பார்க்க

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் புதிய மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். 2025-26-ஆம் கல்வி ஆண்டின் கல்லூரி மாணவப் பேரவையின் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவப் பேரவைத் தலை... மேலும் பார்க்க