நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி
திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினா்களாக பாஜக ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளா் வீரத்திருநாவுக்கரசு, மாவட்ட பாா்வையாளா்கள் ஜி.கே.எஸ். செல்வகுமாா், ஆா்.நந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்டத் தலைவா் செந்தில்வேல், தேசிய பொதுக் குழு உறுப்பினா் மணி, மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் அருண் ஆகியோருடன் மாநில, மாவட்ட, மண்டல அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.