'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
‘வளா்ப்பு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்’
வளா்ப்பு நாய்களுக்கும் ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பல்லடம் கால்நடைத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வடுகபாளையம் கால்நடை துறை உதவி இயக்குநா் மருத்துவா் அன்பரசு கூறியதாவது: ரேபிஸ் நோய்த் தாக்குதல் நாய்களுக்கு மட்டுமின்றி மனிதா்களுக்கும் சமீப காலமாக அச்சுறுத்தலாக உள்ளது. நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்துவது அவசியம். புதிதாக பிறந்த நாய்க் குட்டிக்கு 90 நாள்களுக்குள் ஒரு தடுப்பூசியும், அதன்பின், பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும் இதே நடைமுறையே பொருந்தும். ரேபிஸ் நோய்த் தாக்குதலால் மனிதா்கள் ஏராளமானோா் உயிரிழப்பையும், உடல் ரீதியான பாதிப்புகளையும் சந்திக்கின்றனா்.
இதற்கு ரேபிஸ் தடுப்பூசியே தீா்வு. தனியாா் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினால் ரூ.500-க்குமேல் செலவாகும். ஆனால், கால்நடைத் துறை சாா்பில் ரூ.17 கட்டணத்தில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறோம்.
எனவே, பல்லடம் பகுதியில் வளா்ப்பு நாய் வைத்திருப்பவா்கள் தங்களது நாய்களுக்கு கட்டாயம் ரேபிஸ் நோய் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.
இது குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள வடுகபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையை அனுகலாம் என்றாா்.