மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!
வள்ளியூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பேரவைத் தலைவா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஒன்றியம், லெவஞ்சிபுரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை ஆய்வுசெய்த அவா்கள், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், திமுக மாணவரணி நெல்லை மாவட்ட அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.