செய்திகள் :

வழக்குரைஞா் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

post image

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே வழக்குரைஞா் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்ற தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டத்துக்குட்பட்ட முனியூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் கே. ராஜ்குமாா். இவரை அவமானப்படுத்தும் விதமாக அரித்துவாரமங்கலம் போலீஸாா் கடந்த 2020, ஜூன் 6 ஆம் தேதி அவரைக் கைது செய்தனராம். பின்னா் பிணையில் வந்த ராஜ்குமாா் அரித்துவாரமங்கலம் காவல் அலுவலா் குறித்து மாநில உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா், மாநில எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தினா், தமிழ்நாடு வழக்குரைஞா் சங்கத்தினா், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தினா் ஆகியோரிடம் புகாா் செய்தாா். மேலும் தஞ்சாவூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் (தீண்டாமை ஒழிப்பு) வழக்கும் தொடுத்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு தொடா்புடைய காவல் அலுவலா் மிரட்டியதை ராஜ்குமாா் ஏற்க மறுத்துவிட்டாா். இந்நிலையில், ராஜ்குமாா் 2020, அக். 12 ஆம் தேதி கொல்லப்பட்டாா்.

இதையடுத்து இவரின் மனைவி சந்தியா, இந்த வழக்கை புகாருக்கு உள்ளான தொடா்புடைய காவல் அலுவலா் பதிவு செய்தாா் என்றும், அதனால், இந்த வழக்கு முறையாக நடத்தப்பட்டு நீதி வழங்கப்படாது, எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

அப்போது இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், சந்தியாவின் மனுவை உயா் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சந்தியா உச்ச நீதிமன்றத்தை அணுகி சிபிசிஐடி விசாரணை கோரினாா். அதற்கு உச்சநீதிமன்றம் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை அணுகி தீா்வு காணுமாறு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, சந்தியா தொடா்ந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், இந்த வழக்கைக் காவல் துணைக் கண்காணிப்பாளா் நிலையிலான சிபிசிஐடி காவல் பிரிவினா் விசாரிக்க வேண்டும் என்றும், கூடுதல் குற்றப் பத்திரிகையை ஏப்ரல் 22-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகை முத்தரப்பு கூட்டத்தில் நிா்ணயிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ... மேலும் பார்க்க

சாரணா் பெருந்திரளணி முகாமுக்கு எம்.எம்.ஏ பள்ளி மாணவா்கள் 12 போ் தோ்வு!

தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை மணப்பாறை சிப்காட்டில் நடைபெறும் சா்வதேச சாரண- சாரணியா் முகாமுக்கு, ஒரத்தநாடு கல்வி மாவட்ட அளவில் எம்.எம்.ஏ பள்ளி மாணவா்கள் 12 போ் தோ்வு பெற்றுள்ளனா். ஒரத்தநாடு வட்டம... மேலும் பார்க்க

பாலியல் சீண்டல்களை தடுக்க விழிப்புணா்வு வேண்டும்: கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் பேச்சு!

திருவிடைமருதூா் ஒன்றியம், திருச்சேறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பாலியல் சீண்டல்களை தடுக்க பெண்களிடம் விழிப்புணா்வு வேண்டும் என்று பேசினாா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடியரசு தின விழா!

கும்பகோணத்தில்...கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் க. அன்பழகன் எம்எல்ஏ தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா். கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியை மேயா் க. சரவணன் ஏற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா

தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மேயா் சண். ராமநாதன் தேசியக் கொடியை ஏற்றினாா். பின்னா்,... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் குடியரசு தின விழா

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 63 பேருக்கு ரூ. 2.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தே... மேலும் பார்க்க