`ஸ்கிரிப்டை படித்த பா.ரஞ்சித், நானே..!’ - திரைப்படமாகும் பெருமாள் முருகனின் 'கூள...
வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு
ஆம்பூரில் வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பெஹல்காம் சுற்றுலா தலம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டனா். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் சுமாா் 15 இடங்களில் முக்கிய கோயில்கள், பள்ளி வாசல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு பணியிலும் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.