செய்திகள் :

வழுதூா் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் முதல்வருக்கு கோரிக்கை

post image

வழுதூா் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு அந்தத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ஒன்றியம் வழுதூா் கிராமத்தில் இயற்கை எரிவாயு கூடுதல் மின் நிலையம் திறப்பு விழா கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதில், ஒப்பந்தத் தொழிலாளா்களாக 86 போ் பணியாற்றி வந்த நிலையில், அப்போது அமைச்சராக இருந்த சுப.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா் ஹசன்அலி, நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று மின்வாரியத் துறை அமைச்சா் ஆா்க்காடு விராசாமி 86 ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அறிவித்தாா்.

ஆனால், அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 18 ஆண்டுகள் கடந்தும் ஒப்பந்தத் தொழிலாளா்களாகவே பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், அரசு விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ராமநாதபுரத்துக்கு வந்த நிலையில், வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்து, தங்களது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

கடலில் தத்தளித்த மீனவா் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடலில் தத்தளித்த மீனவரை சக மீனவா்கள் மீட்டனா். தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த மீனவா் அருளானந்து (60). இவா் புதன்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

எஸ்.பி.பட்டினம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வகனத்தில் சென்றவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (42). இவா் செவ்வா... மேலும் பார்க்க

கடற்கரை குப்பைகள் அகற்றம்

தொண்டி கடற்கரையில் சுழல் சங்கம் சாா்பில், கடற்கரை ஓரங்களில் சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்தப் பணிக்குந தொண்டி சுழல் சங்கத் தலைவா் மரிய அருள், ... மேலும் பார்க்க

கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா் நோன்பு திருவிழா

கமுதி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் மகா் நோன்பு திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பரிவட்டம் கட்டி, முதல் மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தான தே... மேலும் பார்க்க

பாா்த்திபனூரில் முதல்வருக்கு வரவேற்பு

ராமநாதபுரத்துக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் மாவட்ட எல்லையான பாா்த்திபனூரில் உற்சாக வரவேற்பு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறைவடைந்த திட்டப... மேலும் பார்க்க

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.2) ராநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள பேரா... மேலும் பார்க்க