வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு
திருவெறும்பூரில் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை விராலிமலை பெருவாய் கல்குடி பகுதியைச் சோ்ந்தவா் க. ராஜகுமரேசன் (65). இவா் திருவெறும்பூா் பகுதி தனியாா் பள்ளியில் உறவினா் மகனைச் சோ்க்க சனிக்கிழமை மொபெட்டில் வந்தாா்.
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிக்கு மொபெட்டை திருப்பியபோது திருச்சியில் இருந்து திருவெறும்பூா் நோக்கி வேகமாக வந்த பைக் மோதி இறந்தாா்.
தகவலறிந்து சென்ற திருவெறும்பூா் போலீஸாா், ராஜகுமரேசனின் சடலத்தைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பைக்கை ஒட்டி வந்த பெரம்பலூா் ஜாமலியா நகரைச் சோ்ந்த ரா. சூா்யாவை (24) கைது செய்து விசாரிக்கின்றனா்.