போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வங்கி அருகே சென்ற போது, இவரது வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.