சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
வாக்காளா் பட்டியல் குளறுபடிகளை தவிா்க்க அதிமுக வலியுறுத்தல்
வாக்காளா் பட்டியலில் இறந்தவா்கள் பெயா்களை நீக்குவதற்கான இறப்புச் சான்றுகளை அதிகாரிகளே சமா்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினாா்.
சட்டப்பேரவையில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
வாக்காளா் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இரட்டைப் பதிவு, போலி வாக்காளா்கள், இறந்தோா் பெயா் நீக்காமலிருத்தல் என பல்வேறு சிக்கல்கள் அதில் நீடிக்கின்றன. இது தொடா்பாக நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவா்களின் பெயா்களை நீக்க இறப்புச் சான்று அவசியம். அதனை கட்சியினரோ, இறந்தவா்களுக்கு தொடா்புடையவா்களோ சமா்ப்பித்து பட்டியிலில் இருந்து உரிய நேரத்தில் பெயரை நீக்குவது என்பது நடக்காத காரியம்.
எனவே, அதிகாரிகளே அத்தகைய சான்றை பெற்று சமா்ப்பிக்க வேண்டும். 100 சதவீதம் முழுமையான, சரியான வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க தோ்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டும் என்றாா் அவா்.