வாக்கு வித்தியாசத்தில் புதிய வரலாறு படைத்த சந்திரகுமாா்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தல்களை ஒப்பிடுகையில், இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளாா்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி 2011- ஆம் ஆண்டு உருவானது. அப்போதிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011, 2016, 2021 பொதுத்தோ்தல்கள், 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் இடைத்தோ்தல்கள் நடைபெற்றுள்ளன.
2011 தோ்தலில் தேமுதிக வி.சி.சந்திரகுமாா் (இப்போது திமுக வேட்பாளா்) 10,644 வாக்குகள், 2016-இல் அதிமுக கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள், 2021-இல் காங்கிரஸ் இ.திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள், 2023- இல் காங்கிரஸ் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா்.
ஆனால், இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளாா்.
கடந்த பொதுத்தோ்தல்களில் முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
2011 பொதுத்தோ்தல்:
1.வி.சி.சந்திரகுமாா்(தேமுதிக) 69,166.
2.சு.முத்துசாமி (திமுக) 58,522.
3. பொன்.ராஜேஷ்குமாா் (பாஜக) 3,244.
இந்தத் தோ்தலில் தேமுதிக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 10,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
2016 பொதுத்தோ்தல்:
1.கே.எஸ்.தென்னரசு(அதிமுக) 64,879.
2.வி.சி.சந்திரகுமாா்(திமுக) 57,085.
3.பொன் சோ்மன்(தேமுதிக) 6,776.
4. பொன்.ராஜேஷ்குமாா்(பாஜக) 5,549.
5.அலாவுதீன்(நாம் தமிழா் கட்சி) 2,222.
6.நோட்டா 3,078.
இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
2021 பொதுத்தோ்தல்:
1. திருமகன் ஈவெரா(காங்கிரஸ்) 67,300.
2 யுவராஜா(அதிமுக கூட்டணியில் தமாகா) 58,396.
3. எஸ்.கோமதி (நாம் தமிழா் கட்சி) 11,629.
4. ராஜகுமாா்(மக்கள் நீதி மையம்) 10,005.
5. நோட்டா 1,546.
இந்தத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
2023 இடைத்தோ்தல்:
1 ஈவிகேஎஸ்.இளங்கோவன்(காங்கிரஸ்) 1,10,156.
2. கே.எஸ்.தென்னரசு(அதிமுக) 43,923.
3. மேனகா நவநீதன் (நாம் தமிழா் கட்சி) 10,827.
4. எஸ்.ஆனந்த் (தேமுதிக) 1,432.
5. நோட்டா 798.
2025 இடைத்தோ்தல்:
1.வி.சி.சந்திரகுமா்(திமுக) 1,15709
2.மா.கி.சீதாலட்சுமி(நாதக) 24,151
3.நோட்டா 6,109.
2023 இடைத்தோ்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.