ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி
வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா?
வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் வருமானம் குறித்தும், எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.
மறைந்த போப் பிரான்ஸ் தனது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்து நிதி சார்ந்த விவகாரங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
1967 ஆம் ஆண்டு அப்போஸ்தலிக் சீயின் சொத்துகளை பராமரிக்க நிர்வாகம் அமைக்கப்பட்ட பிறகு அதன் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
அப்போஸ்தலிக் சீ என்பது திருச்சபையில் அதிகாரத்தின் ஒரு மையமாகும்.

இந்த சொத்துகளை பராமரிக்கும் நிர்வாகம் (APSA) வெளியிட்ட அறிக்கையின் படி, வாடிகன் நாடால் நடத்தப்படும் தேவாலய கிளையின் மொத்த லாபம் 52 பில்லியன் டாலருக்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
சொத்துகளை பராமரிக்கும் நிர்வாகத்தின் தகவலின்படி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை திருச்சபை நிர்வகித்து அதிலிருந்து வருமானம் ஈட்டுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஐந்தில் ஒரு பங்கை வாடகைக்கு விடப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் 84 மில்லியன் டாலர் வருமானம் வருவதாக சொத்துகளை பராமரிக்கும் நிர்வாகம் கூறுகிறது.
இந்த விவரங்கள் அனைத்தும் வாட்டிகனின் நிதி அமைப்புடன் தொடர்புடையவை மட்டுமே உலகில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் மற்ற கிளைகளின் கணக்கு இதில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவும் திருச்சபையின் மற்றொரு வருமானமாக உள்ளது
வாடிகனில் உள்ள மதம் மற்றும் வரலாற்று கட்டிடங்கள், அருங்காட்சியங்கள், நூலகங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படும் இடமாக உள்ளது. இதன் மூலமும் வருமானம் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
சொத்துக்களின் நிகர மதிப்பு அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.