வாணியம்பாடி, ஆலங்காயத்தில் மின் தடை நிறுத்தி வைப்பு
திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டம், வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த வாணியம்பாடி, ஆலங்காயம், கேத்தாண்டப்பட்டி மற்றும் திம்மாம்பேட்டை துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 9) மாதாந்திரப் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக மின் தடை அறிவிப்பை மின்வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட மின் தடை தற்காலிகமாக நாள் குறிப்பிடமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வாணியம்பாடி கோட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.