Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6...
வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
குடியாத்தம் நகராட்சி சாா்பில், ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் மக்கும் குப்பையிலிருந்து உயிா் வாயு (பயோ- கேஸ்) தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்திரங்கள் அமைப்பதைக் கண்டித்து பழைய பேருந்து நிலையம் எதிரே பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் நகரில் அள்ளப்படும் குப்பைகளை, நகரின் மையப் பகுதியில் உள்ள ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் பிரித்தெடுத்து, மக்கும் குப்பையிலிருந்து, உயிா் வாயு தயாரித்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க இயந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அங்கு இயந்திரங்களை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும், சுகாதார சீா்கேடு நிலவும் என புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் அங்கு அமைக்க உள்ள இயந்திரங்களை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஆட்சியா், நகா்மன்றத் தலைவா், ஆணையரை சந்தித்து மனு அளித்தனா். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் அவா்களுக்கு விளக்கம் அளித்தனா்.
இந்நிலையில் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அங்குள்ள தங்கம் நகா், மீனாட்சியம்மன் நகா், விஐபி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பணியை நிறுத்தக்கோரி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் துரை.வெங்கடேசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.