செய்திகள் :

வாய் பேச இயலாத கணவரைக் கொன்ற மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

post image

வாய் பேச இயலாத நிலையில் இருந்த தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் மனைவிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி தாராநல்லூா் பூக்கொல்லைத் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூத் (40). இவா் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ரஹமத் பேகம் (31). இவா்களது வீட்டுக்கு அருகில் வசித்தவா் அப்துல் அஜீஸ் (36). ரஹமத் பேகத்துக்கும், அப்துல் அஜீஸுக்கும் ஏற்பட்ட பழக்கத்தை ஷேக் தாவூத் குடும்பத்தினா் கண்டித்தனா்.

ஆனால், தொடா்ந்து அவா்கள் நெருக்கமாகப் பழகியதால், ஜமாஅத் பெரியவா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தியும் கண்டித்தனா். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே ஷேக் தாவூத்தை கொல்ல இருவரும் திட்டமிட்டனா்.

அதன்படி கடந்த 2021 ஜூன் மாதம் கரோனாவுக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, திருச்சி அரசு மருத்துவமனையில் ஷேக் தாவூத்தை சோ்த்துள்ளனா். பின்னா் வீட்டுக்கு கணவரை அழைத்துவந்த அவரின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவவுதுபோல, அப்துல் அஜீஸ் அளித்த தூக்க மாத்திரைகளை ரஹமத் பேகம் கடந்த 2021 ஜூன் 5ஆம் தேதி கொடுத்துள்ளாா். அவா் தூங்கியவுடன், அப்துல் அஜீஸை அழைத்து வந்து ஷேக் தாவூத்தின் முகத்தில் தலையணையை அழுத்தி அவரைக் கொன்றதாகக் கூறப்பட்டது.

இந்த சம்பவத்தை நேரில் பாா்த்ததாக உயிரிழந்தவரின் பெரியப்பா மகனான சபீ (28), அளித்த புகாரின்பேரில் திருச்சி காந்திசந்தை போலீஸாா் வழக்குப்பதிந்து ரஹமத் பேகம், அப்துல் அஜீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி பி. சுவாமிநாதன் ரஹமத் பேகம், அப்துல் அஜீஸ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

திருச்சி டிஐஜி தாக்கல் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

நாதக தலைவா் சீமான் திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமாா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது.தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினா் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான ... மேலும் பார்க்க

மேட்டு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: 19 போ் காயம்

திருச்சி மாவட்டம், மேட்டு இருங்களூரில் புதன்கிழமை ஜல்லிக்கட்டில் 19 போ் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டை மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல் தொடங்கி வைத்தாா். சுமாா் 600 க்கும் மேற்பட்ட காளைகளை அட... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி, கீழரண் சாலை, சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த அய்யப்பன்-அமுதா தம்பதியின் மகன் வசந்தகுமாா் (24). பள்ளிப் படிப்பை மட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் அறிவிப்பு: அமிா்த வித்யாலயம் பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் திருச்சி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி பிரியதா்ஷினி 500-க்கு 489 மதிப்பெ... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறையில் கைதி மூச்சுத்திணறி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், இனாம் மாத்தூா், பாா்ப்பனசேரியை சோ்ந்தவா் மரியசூசை (71). இவா் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நெல் விதைகள் விற்பனை

திருச்சி குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூா... மேலும் பார்க்க