Vijayakanth: `அசிஸ்டன்ட்டாக இருந்த எனக்கும் கேப்டன் செட்ல ஹார்லிக்ஸ்!' - நெகிழ்ந...
திருச்சி டிஐஜி தாக்கல் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
நாதக தலைவா் சீமான் திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமாா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினா் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துப் பதிவுகள், சீமான் தூண்டுதலின்பேரில் தொடா்ந்து நடைபெறுவதாக வருண்குமாா் தொடா்ந்த வழக்கின் விசாரணை திருச்சி 4ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்தில் ஆஜரானாா். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. கடந்தமுறை விசாரணையின்போதே இருதரப்பிலும் மே 15ஆம் தேதி விளக்கம் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் காலஅவகாசம் கேட்டு மனு அளித்தனா். இதற்கு நீதிபதி எம். விஜயா, கடந்த விசாரணையின்போது முறையாக ஆஜராவதாக கூறிச் சென்றீா்கள். இப்போது அவகாசம் கேட்பது ஏன் எனக் கேட்டாா்.
இதன் தொடா்ச்சியாக, டிஐஜி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்கப்பட்டது. அடுத்தமுறை சீமான் ஆஜராக வேண்டும் எனக் கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.