செய்திகள் :

வாரிசு அரசியல்: "இன்பநிதி இன்னைக்கு CEO; நாளைக்கு CM; ஆனால் நாங்க விடமாட்டோம்" - தமிழிசை தாக்கு

post image

வாரிசு அரசியல் விவகாரத்தில் தி.மு.க-வை பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இவ்வாறிருக்க, பா.ஜ.க-வில் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுக்கு நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கூடுதலாக, ஆர்த்திக் என்பவரும் அதே பதவியில் நியமிக்கப்பட்டியர்ந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், "நயினார் நாகேந்திரன் மகனுக்கு பா.ஜ.க-வில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியலில் வராதா?" என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளிக்கையில், "23 பிரிவுகளில் அவருக்கு ஒரு பிரிவு வழங்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் ஒன்றும் உதயநிதி மாதிரி எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவருக்கு அடுத்தவர் என்று வைக்கவில்லையே.

அவர் ஏற்கனவே அரசியல் அனுபவம் பெற்றிருப்பதால் 23 பிரிவுகளில் ஒரு பிரிவு வழங்கப்பட்டிருக்கிறது.

இன்று தி.மு.க என்ன செய்கிறது. அடுத்த நிலையைக் கொடுத்து விடுகிறது. ஸ்டாலினை நாங்கள் எதுவும் சொல்வதில்லை. ஏனெனில் அவர் உழைத்து வந்தார்.

18 கோடி பேரில்தான் ஒருவர் தலைவராக வர முடியும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.

Inban Udhayanidhi - Red Giant Movies
Inban Udhayanidhi - Red Giant Movies

உங்களால் (திமுக) கூற முடியுமா? இன்று இன்பநிதி சிஇஓ ஆகிவிட்டார். அடுத்து CM ஆவார்.

அப்படி ஆக முடியாது. நாங்கள் விடமாட்டோம். ஆனால், அடுத்த அடியை அப்படித்தானே எடுத்து வைக்கிறார்கள்" என்று கூறினார்.

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்பன் உதயநிதி படத்தை வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"மாஸ்கோ வந்தால் நேரில் பேசலாம்; 100% பாதுகாப்பு உறுதி" - புதினின் அழைப்பை நிராகரித்த ஜெலன்ஸ்கி!

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. பல தலைவர்கள் அமைதிக்காக குரல் கொடுத்துள்ளனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்த முயற்சிகள் தோல்வ... மேலும் பார்க்க

VCK: "அவன் சாவு என்னைக் குற்ற உணர்ச்சிக்குள் வீழ்த்தியது" - தம்பி குறித்து திருமாவளவன் உருக்கம்

"நான் உயிரோடு இருக்கிறேன் என்பதாலேயே தம்பி ராதாவின் மரணத்தை யாரும் பெரிதாகக் கருதவில்லை என்கிற வேதனை மேலும் கடுமையாக என்னை வாட்டியது" என்று தன் தம்பியின் நினைவு நாளில் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார் வி... மேலும் பார்க்க

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு செ... மேலும் பார்க்க

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்கள் | Photo Album

செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெ... மேலும் பார்க்க

'எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு'- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்... மேலும் பார்க்க

நேபாளம்: Youtube, Facebook, Instagram, X உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கம் - காரணம் என்ன?

நேபாள அரசு Facebook, X, YouTube போன்ற பிரதான சமூக ஊடகங்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.s... மேலும் பார்க்க