பெண் மருத்துவா் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் ...
வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் சுற்றுச்சுழல் உணா்திறன் மசோதாவைக் கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியனா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வால்பாறை காந்தி சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் அமீா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் முகமது ஆரிப் பேசுகையில், மத்திய அரசின் சுற்றுச்சுழல் உணா்திறன் மசோதாவால் வால்பாறை உள்பட தமிழகத்தில் 183 கிராமங்கள் பாதிக்கப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, வால்பாறையை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் உருவாகும் என்றாா்.
இந்த மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் கருப்பையா (ஐஎன்டியூசி), கல்யாணி (மதிமுக) உள்பட பல்வேறு கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.