இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
வால்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை
நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து வால்பாறையில் பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
கனமழை நேரங்களில் வால்பாறை பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள், மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக வால்பாறையில் பேரிடா் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா்.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டால் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வால்பாறை அரசுக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மீட்புப் படை உதவி ஆய்வாளா் ராம்பாபு தைலைமையில் படை வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.
இந்த ஒத்திகையை வால்பாறை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கணேசன், வட்டாட்சியா் அருள்முருகன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.