செய்திகள் :

வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி

post image

வாழப்பாடி: வாழப்பாடியில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்குக்காடு சாலை துண்டிக்கப்பட்டது. அதனால், இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி பகுதியில் 4 கி.மீ. இருவழி புறவழிச்சாலை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 4 வழிச்சாலை அமைக்கும் போது, வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குக்காடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இணைப்புச்சாலை அமைத்து பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை இணைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு 100 மீ. தொலைவுக்கு மட்டுமே இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்ல வழியின்றி தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து கிழக்குக்காடு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சக்திவேல் கூறுகையில், ‘வாழப்பாடியில் இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்தும் போது, கிழக்குக்காடு செல்லும் சாலைதுண்டிக்கப்பட்டது. இதனால் சாலையோரமாக உள்ள குண்டும் குழியுமான சாலையிலேயே சென்று வருகிறோம். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி இணைப்புச் சாலை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க