செய்திகள் :

வாழப்பாடி அருகே விவசாயி கொலை: சகோதரியின் கணவர் நண்பருடன் கைது!

post image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவரே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளதால், இருவரையும் வாழப்பாடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வருவதாகக் கூறி சென்ற முனியன் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், மாயமான தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு, அவரது மனைவி செல்வி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், முனியனின் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடாஜலம் என்பவர், தனது நண்பர் சேகர் என்பவருடன் சேர்ந்து முனியனை அடித்து கொலை செய்திருக்கலாம் என, அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சில தினங்களுக்கு முன்பு முனியனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி, மாயமான விவசாயி முனியனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வாழப்பாடி காவல் துறையினருக்கு சேலம் போலீஸ் எஸ்.பி., உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் பிடித்த வாழப்பாடி போலீஸார் இரு நாட்களாக விசாரணை நடத்தினர். அப்போது, கொலையுண்ட விவசாயி முனியன், தனது உடன் பிறந்த சகோதரியான நீலாவுடன் நெருங்கி பழகி வந்ததாலும், தனது மைத்துனரான விவசாயி முனியனை கொலை செய்து விட்டால் தனக்கு சொத்து கிடைக்கும் என்பதாலும், வெங்கடாஜலம், தனது நண்பர் சேகருடன் சேர்ந்து முனியனை அழைத்துச் சென்று தனது தோட்டத்திற்கு அருகே அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

கொலை செய்த தடயங்களை மறைக்க, முனியனின் உடலை எடுத்துச் சென்று அத்தனூர்பட்டி மயானத்தில் குப்பையில் மறைத்தவைத்திருந்து, இரு தினங்களுக்குப் பிறகு அங்கு ஒரு உடல் எரியூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த தீயிலேயே முனியனின் உடலை போட்டு எரித்து விட்டதாகவும், கொலையுண்ட முனியனின் இருசக்கர வாகனத்தை துக்கியாம்பாளையம் கமலாலயம் அருகிலுள்ள பயன்படாத விவசாயி கிணற்றில் போட்டுள்ளதாகவும் போலீசாரிடம் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி முன்னிலையில், பாழடைந்த கிணற்றில் கிடந்த விவசாய முனியனின் இருசக்கர வாகனத்தை மீட்ட தனிப்படை போலீஸார் இருவரையும் கைது செய்தனர். இன்று (ஜூலை 1) மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

மாணவி வன்கொடுமை வழக்கு: அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரன் யாா், யாரிடம் பேசினாா் என்ற ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனுவை செ... மேலும் பார்க்க