வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற கவலையும் பயமும் வருகிறதா? - பிரம்மஹத்தி பரிகார ஹோமம்
தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்கால விருப்பங்களை நிறைவேற்றும் பிரம்மஹத்தி பரிகார ஹோமம்! ஆகஸ்ட் -17 ஞாயிற்றுக்கிழமை திப்பிராஜபுரத்தில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. சங்கல்பியுங்கள்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எங்கும் எதிலும் நம்பிக்கையில்லாத நிலை. எவரையும் நம்ப முடியாத அளவுக்கு விரக்தி! வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற கவலையும் பயமும் வருகிறதா! வேண்டாம், கவலையை விடுங்கள். தீர்வுகள் இல்லாத பிரச்னைகளே இல்லை என்கிறது ஆன்மிகம். அதிலும் இத்தோடு என் வாழ்க்கையில் முன்னேற்றமோ இன்பமோ இல்லை என்பவர்களுக்காகவே உதவுகிறது பிரம்மஹத்தி பரிகார ஹோமம்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் எல்லா பாவங்களும் தோஷங்களாகி விடுகின்றன என்கின்றன சாஸ்திரங்கள். முன் ஜன்மத்தில் நாம் செய்த பாவங்களும் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் கூட நம்மை பிரம்மஹத்தி தோஷமாகப் பீடித்து நம்மை கவலையில் ஆழ்த்தும். எந்த சந்தோஷமும் இல்லாத நிலையை உருவாக்கும். மங்கல நிகழ்வுகள் எதையும் நிகழ்த்த விடாமல் செய்யும். இந்த கவலைகளில் எல்லாம் இருந்து விடுபட அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரிகார வழிபாடாக இருப்பதே பிரம்மஹத்தி பரிகார ஹோமம்.

தோல்வி, தடைகள், வம்பு, வழக்குகள், தடங்கல் என்று எதுவானாலும் அஞ்சாதீர்கள். கடவுள் இருக்க கவலை வேண்டாம். சகல பாவங்களையும் தோஷங்களையும் தீர்ப்பவன் மங்கல நாயகனான சிவபெருமான். அவனை சரண் அடைய நலங்கள் யாவும் விளையும். துயர்கள் யாவும் நீங்கும். அந்த வகையில் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வரும் ஆகஸ்ட் -17 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மேல் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. அபூர்வமான இந்த வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப பிரார்த்தனை செய்து கலந்துகொள்ளலாம். இதனால் சகல பிரச்னைகளும் நீங்கி, உங்கள் வாழ்க்கை வளமாகும். இந்த சிறப்பான ஹோம வைபவம் கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் நடைபெற உள்ளது.
திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவலிங்க வடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். கும்பகோணம், மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே 7கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். இங்குதான் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் ஆலயம் அமைந்துள்ளது. சுந்தரகுஜாம்பிகை, கோவலர்வல்லி என இரு அம்பிகைகளோடு சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முக்குறுணி விநாயகரும் ஸ்ரீதண்டாயுதபாணியும் இங்கே அருள்கிறார்கள். மேலும் ஸ்ரீசிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீஆனந்த நடராஜராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இந்த நடராஜர் சிதம்பரத்திலுள்ளது போல தாழ்சடையோடு, ஊம்மத்தம்பூ, கங்கை, சூடியபடி உள்ளார். மேலும் ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர் எனும் அபூர்வ ஸ்படிக லிங்கம் இங்கு உள்ளது இதற்கு தினந்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதைக் காண்பவரின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்பதும் இக்கோயிலின் விசேஷம்.
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீங்காத புகழும் நீடித்த ஆரோக்கியமும் பெற இந்த சிறப்பு பிரம்மஹத்தி பரிகார தோஷத்தில் கலந்து கொள்ளுங்கள். ஒரு மண்டல காலத்தில் தோஷ நிவர்த்தி பெற்று சிறப்பொடு வாழுங்கள்!
QR CODE - BRAMMAHATHTHI DHOSHA PARIHARA HOMAM

வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம். https://www.facebook.com/SakthiVikatan
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07