செய்திகள் :

வாழ்த்துங்களேன்..!

post image

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.

26.11.24 முதல் 9.12.24 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 15.11.24

ஸ்ரீராம நந்தீஸ்வரர்

ஸ்ரீராம நந்தீஸ்வரர் கோயிலில்...

26.11.24 முதல் 9.12.24 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்திற்கு அருகே உள்ள ஸ்ரீசரிவார்குழலி உடனாய ஸ்ரீராமநந்தீஸ்வரர் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களைத் தரிசித்த பாக்கியம் இவாவாலயத்து மூர்த்தியை வணங்கினாலே கிடைத்து விடும் என்பது ஐதிகம். ஸ்ரீராமபிரான் சிவபூஜை செய்த தலங்களுள் ஒன்றுதான் ராமநந்தீஸ்வரம். கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டு துன்புறுபவர்கள் இங்கு வழிபட்டு நன்மை பெறலாம். மேலும் நோய்நொடிகள், தரித்திரம், கவலை, பயம் போன்றவை நீங்கி இன்புறுவர் என்பது நம்பிக்கை.

நீண்ட ஆயுள், நீங்காத செல்வம், நிலைத்த ஆரோக்கியம் என அனைத்தும் அருளும் அற்புதமான இந்தத் தலத்தில், வாசகர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவாரஸ்யங்கள்..!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோருக்கு அங்கு செயல்படும் தபால் நிலையம் பற்றி தெரிந்திருக்கும். சபரிமலையில் 1963-ம் ஆண்டு தபால் நிலையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது. மாளிகப்புறம் சன்னிதானத... மேலும் பார்க்க

நெல்லை: சரண கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.! | Photo Album

நெல்லை பொதிகை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்.!சபரிமலைக்கு மாலை அணி... மேலும் பார்க்க

'1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்' - தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும... மேலும் பார்க்க

சபரிமலை நடை திறப்பு: ``இது மக்களுக்கு சேவை செய்யும் பணி..'' - போலீஸாருக்கு டிஜிபி அறிவுரை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறப்புமண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஐயப்ப சுவாமி கோயில் திருநடையை ... மேலும் பார்க்க

சூரியனார் கோயில் மடம்: `திருமண சர்ச்சை; ஆதீனத்தை வெளியேற்றி, பூட்டு போட்ட மக்கள்’ - நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது சூரியனார் கோயில் மடம். தமிழகத்தில் உள்ள 18 சைவ மடங்களில் பழைமையான இந்த மடத்திற்கு என சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ச... மேலும் பார்க்க

கார்த்திகை திருநாள்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளிர இருக்கும் 3000 மண் விளக்குகள் | Photo Album

கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்கார்த்திகை மண் விளக்குகள்... மேலும் பார்க்க