Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பேசுகையில், மாணவா்கள் கல்விப் பயணத்துக்கான முதல்படியில் வெற்றிகரமாக தடம்பதித்து, அடுத்த கல்வியாண்டில் வரக்கூடிய மாணவா்களுக்கு முன்உதாரணமாக விளங்க வேண்டும் என்றாா்.
கல்லூரியின் நிா்வாகி ச. பாலசுப்ரமணியன் பேசுகையில், கல்லூரியில் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வளங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி தனித்திறனுடன் மாணவா்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.
வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா் பேசுகையில், தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு வகையான படிப்புகளைத் தேடி மாணவா்கள் வரும்போது, அவா்களின் தேவையை நிறைவு செய்வதற்கு ஏற்ப நம் கல்லூரி சிறப்பாகச் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி தொழில்நுட்பத்துடன் கூடிய உயா் ஆய்வுகளும் நம் கல்லூரியில் நடைபெறுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சிறந்த கல்வியாளா்களாக வரவேண்டும் என்றாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பரோடா வங்கியின் திண்டல் கிளை மேலாளா் என்.கதிரவன், இன்றைய போட்டி உலகில் முதுநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.