கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல! அமர்நாத் ராமகிர...
விக்ரம் - பிரேம் குமார் படம் அறிவிப்பு!
நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.
இந்த நிலையில், விக்ரம் இயக்குநர் பிரேம் குமார் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்னேஷல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
96, மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து 96 - 2 படத்தை இயக்க பிரேம் குமார் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் தள்ளிப்போக, திரில்லர் கதையொன்றை எழுதினார்.விக்ரம் இக்கதையில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கவினின் புதிய பட படப்பிடிப்பு துவக்கம்!