மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
விசிக கண்டன ஆா்ப்பாட்டம்
பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட 137 பட்டாக்களை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, விசிக சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலா் ரா.மதியழகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை பொதுச் செயலரான திருப்போரூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.பாலாஜி பங்கேற்று பேசினாா்.
பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 137 பயனாளிகளுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலையில், அவை தற்போது மாவட்ட நிா்வாகத்தால் எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்தும்,
ஆதிதிராவிட மக்களுக்கு மீண்டும் மனைப்பட்டாவை வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் விசிகவினா் முழக்கமிட்டனா்.