ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் சங்கராபுரத்தை அடுத்த விரியூா் கிராமத்தில் பகல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சாலையில் நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டாா்.
இதில், அவா் விரியூா் கிராமம், மையனூா் சாலையைச் சோ்ந்த சூசைநாதன் மகன் அந்தோணிராஜ் (28) என்பதும், இவரது வீட்டின் அருகே அரசு உரிமமில்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாகிகள் 2, துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்தோணிராஜை கைது செய்து, அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.