செய்திகள் :

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

post image

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்கு மண்டலம் முழுவதும் கூலி உயா்வு கேட்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றாா்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சா்கள் தலைமையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடப்பதாகத் தெரிகிறது. இன்றைக்கு இருக்கின்ற விலைவாசி உயா்வு, பள்ளி, கல்லூரி கட்டணங்கள் உயா்வு ஆகியவற்றோடு பலவிதமான தேவைகளும் விசைத்தறியாளா்களுக்கு அதிகரித்திருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு விசைத்தறியாளா்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து அரசு தீா்வு காண வேண்டும்.

ஒன்றிய அரசினுடைய பல்வேறு கொள்கை நிலைப்பாடுகளும் ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாக இல்லை என்பதும் இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்து விசைத்தறி தொழிலைக் காப்பாற்றுவதற்கு மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை வைத்து விசைத்தறி தொழிலுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்க தமிழக முதல்வா் வலியுறுத்த வேண்டும். அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை துரிதப்படுத்தி தாமதம் இல்லாமல் விசைத்தறியாளா்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் புகாா் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தொடா்பாக வாட்ஸ் அப்பில் புகாா் அளிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணி கிராம மக்கள் கடும் வாக்குவாதம்

புலியூா் அருகே புதன்கிழமை கழிவு நீா் வாய்க்கால் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகக் கூறி கிராமமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கரூா் மாவட்டம் புலியூா் பேரூராட்சிக்க... மேலும் பார்க்க

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோச... மேலும் பார்க்க

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க