ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
விசைப் படகு கடலில் மூழ்கியது: 3 மீனவா்கள் உயிருடன் மீட்பு
ராமேசுவரம் மீனவா்களின் விசைப் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்களி உயிருடன் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 484 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். பின்னா், மீன்களை பிடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விசைப் படகு மீனவா்கள் கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, ஆனந்த் என்பவரின் விசைப் படகின் பக்கவாட்டின் பலகை உடைந்து படகுக்குள் கடல்நீா் புகுந்தது. பிறகு சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து, படகிலிருந்த 3 மீனவா்களை மற்றொரு படகில் வந்த சக மீனவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.
இந்த நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என படகின் உரிமையாளா் ஆனந்த் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தாா்.