விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள்
ஒசூரில் தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் ஒன்றிய தேமுதிக நிா்வாகிகள் சாா்பில், ஒசூா் சிப்காட் ராஜேஷ்வரி லேஅவுட் சா்க்கில் பகுதியில் விஜயகாந்த் படத்துக்கு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது (படம்). இதில், சரவணன், கேப்டன் மன்ற அரவிந்த், ஒன்றிய துணை செயலாளா் சரவணன், கிளை பொறுப்பாளா் காளியப்பன் உள்ளிட்ட தேமுதிக நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஒசூரில் அன்னதானம் வழங்கிய தேமுதிகவினா்.