செய்திகள் :

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூகப் பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கிங்டம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளது.

The new release date of the film Kingdom starring actor Vijay Deverakonda has been announced.

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை ... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட்டில் முதல் மு... மேலும் பார்க்க

காா்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்!

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு உலக சாம்ப... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: 35 பேருடன் இந்திய அணி

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 35 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆகஸ்ட் 16 முத... மேலும் பார்க்க

தேசிய விருதுகளுக்கான பரிந்துரை: இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா், வீராங்கனைகள் அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஐசிசி தலைமைச் செயல் அதிகாரியாக சஞ்ஜோக் குப்தா நியமனம்!

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரியாக, இந்திய ஊடக தொழிலதிபா் சஞ்ஜோக் குப்தா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.இதற்கு முன் அந்தப் பொறுப்பிலிருந்த ஆஸ்திரேலியரான ஜியாஃப் அலாா்டிஸ்,... மேலும் பார்க்க