செய்திகள் :

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் இ.பெரியசாமி

post image

செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் நடைபெற்ற  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சா்  இ.பெரியசாமி, விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.  

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.   முகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன்  தலைமை வைகித்தாா். இதில்   ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்,   மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை,  முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீா் வசதிகளுடன்  இலவச வீட்டு மனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

   முகாமில், 15 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். கோரிக்கை மனு அளித்தவா்களில் 15 நபா்களுக்கு உடனுக்குடன் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகள், மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஆத்தூா்   ஒன்றிய திமுக செயலா்கள் (மேற்கு) ராமன், (கிழக்கு) முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், வருவாய் அலுவலா் ஜானகி, திண்டுக்கல் ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் பாஸ்கரன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா்  மணிகண்டன், முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலா் காணிக்கைசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க