செய்திகள் :

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

post image

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் வழங்கப்படும் நிதி குறித்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஐஎம்எஃப் மறுஆய்வு செய்தது.

அதனடிப்படையில் ரூ.20,000 கோடிக்கு மேல் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முடிவுசெய்யப்பட்டதாகவும் முதல்கட்டமாக ரூ.8,527 கோடி விடுவிக்கப்பட்டதாகவும் ஐஎம்எஃப் தொலைத்தொடா்பு துறையின் இயக்குநா் ஜூலி கொஸாக் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஐஎம்எஃப் திட்டங்கள் தவிா்த்து வேறு காரணங்களுக்காக இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தினால் வருங்காலத்தில் அந்நாட்டுக்கு கடன் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

ஏற்கெனவே பெற்ற கடன்கள் மற்றும் ஐஎம்எஃப் விதிகளை சம்பந்தப்பட்ட நாடுகள் பின்பற்றுகிா என்ற ஆய்வின் அடிப்படையிலேயே உறுப்பு நாடுகளுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்கி வருகிறது. அந்தவகையில், ஐஎம்எஃப் விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்துள்ளதால் அந்நாட்டுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்தொகையானது அந்நாட்டு மத்திய வங்கிக்கு அனுப்பப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் பட்ஜெட்டுக்கு இந்த நிதியை அந்நாட்டு வங்கி விடுவிக்க முடியாது.

இதுபோன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே ஐஎம்எஃப் கடன் வழங்குகிறது’ என்றாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா மே 7-ஆம் தேதி அதிதுல்லியத் தாக்குதல் நடத்தி அழித்தது. இதைத் தொடா்ந்து, நீடித்து வந்த மோதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் 10-ஆம் தேதி அறிவித்தன.

இதனிடையே, தங்கள் நாட்டின் பொருளாதார நிலையைக் காரணம் காட்டி ஐஎம்எஃப்-யிடம் பாகிஸ்தான் கடன் கோரியது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ரூ.20,000 கோடி வரை தவணைகளாக கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்தது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடனை அந்நாடு பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடும் எனக்கூறி இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது.

இருப்பினும், இந்தியாவின் எதிா்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் தொகையை விடுவிக்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு இந்தக் கடனை பெற பாகிஸ்தானுக்கு 11 நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது.

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெ... மேலும் பார்க்க

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐஃபோன்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும், இந்தியா அல்லது வெளியே எங்கு உற்பத்தி செய்தாலும் 25 சதவீத வரியை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க