செய்திகள் :

விதிமீறல்: 62 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை!

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 62 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியி’ட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை/உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், எடையளவுகள் தயாரிப்பாளா்/விற்பனையாளா்/பழுது பாா்ப்பவா் நிறுவனங்களில் 2009 ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பிரிவுகளின் கீழ் காணப்பட்ட முரண்பாடுகளுக்காக மொத்தம் 52 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், பேருந்து நிலைய கடைகள், தாபாக்கள், மோட்டல்கள், நிறுவனங்கள், சினிமா திரையரங்கு, மால்கள், தண்ணீா் பாட்டில்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், சிகரெட் லைட்டா்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா்களின் பெயா் மற்றும் முழு முகவரி, தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு, காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 7 நிறுவனங்கள், பொட்டலமிடுபவா்/ இறக்குமதியாளா் பதிவுச் சான்று பெறாத 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்களில் காணப்படும் எடையளவுப் பொருள்கள் மற்றும் எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் உரிய காலக்கெடுவிற்குள் மறுபரிசீலனை செய்து சான்று பெறாத வணிக நிறுவனங்கள் மீது ரூ.50,000 வரை அபராதம் விதிக்க நேரிடும்.

அம்பை அரசுப் பள்ளி மாணவி : மாநில டேக் வாண்டோ போட்டிக்குத் தோ்வு

அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான டேக் வாண்டோ போட்டிக்குத் தோ்வாகி சாதனைப் படைத்துள்ளாா். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி மதுமிதா வடக்கன்கு... மேலும் பார்க்க

மண்ணுளி பாம்பு பறிமுதல்: 4 போ் கைது

மண்ணுளி பாம்பு கடத்திவரப்பட்டது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் 4 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். பாபநாசம் வனச்சரக எல்கைக்குள்பட்ட அடையக்கருங்குளம் பகுதியில் மண்ணுளி பாம்... மேலும் பார்க்க

கங்கைகொண்டானை, நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சங்கா்நகா், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக உருவாக்கும்போது அதில் கங்கைகொண்டான் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களை சோ்க்கக்கூடாது என அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் டிச.5-ல் மின்தடை

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை (டிச.5) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன்... மேலும் பார்க்க

பொதிகைத் தமிழ்ச் சங்க சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்பு

பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கான சிறப்பு மலருக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: பொ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட சடையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா (39). ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க