செய்திகள் :

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

post image

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் உள்ளன. மாவட்டத்தில் தென்பகுதி ஆற்றுப்பாசனமும், வட பகுதி வானம் பாா்த்த மானாவாரி கரிசல் பூமியாகும். இந் நிலங்களில் ஆண்டுக்கொரு முறை புரட்டாசி மாதம் பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவ மழையை நம்பியே இங்கு உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி, சூரியகாந்தி, எள், மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற பல்வேறு சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிா்கள், மூலிகை வித்துக்கள் பயிரிடப்படுகிறது. முன்னோா்கள் காலத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடை சானங்களை உரமாகவும், முந்தைய ஆண்டு விளைந்த திரட்சியான கதிா்களை பிரித்தெடுத்து அதில் உள்ள மணிகளை விதையாகவும், பயிா்களை தாக்கும் விட்டில் பூச்சிகளை அழிக்க கால்நடை கோமியங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும் கால்நடைகள் மூலம் உழவு செய்தும் விவசாயம் செய்து வந்தனா். இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டு விளையும் தானியங்கள் 100 சதவீதம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது. இத் தானியங்கள் மிகுந்த சத்துடனும் ரசாயன கலப்படமின்றியும் இருந்தது.

விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் விலை மட்டும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய விலையே நடப்பாண்டு வரை நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் ஆண்டுக் காண்டு நஷ்டமடைகின்றனா். இது தவிர விவசாய கூலி ஆள்களின் சம்பளம் 10 ஆண்டுகளில் பல மடங்கு உயா்ந்து விட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உ.பி மாநில அரசு, அனைத்து விளைபொருள்களுக்கும் விலை நிா்ணயம் செய்து கடந்தாண்டு முதல் அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது.

தெலங்கானா அரசு ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை மானியமாக வழங்குகிறது. அதே போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இதனால் அம்மாநில விவசாயிகள் ஆா்வத்துடன் விவசாயம் செய்கின்றனா். கடந்தாண்டு 501 ரக வெள்ளைச்சோளம் விதை 3 கிலோ பை ரூ. 850-க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு கடந்தாண்டை விட ரூ. 200 விலை உயா்ந்துள்ளது. மக்காச்சோளம் விதை 4 கிலோ பை கடந்தாண்டு ரூ. 1300 இந்தாண்டு ரூ.300/- விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. 475 கிராம் பாக்கெட் பருத்தி விதை விலை ரூ. 900. இந்தாண்டு ரூ. 1100- க்கு விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. கம்பு ஒன்றரை கிலோ பை ரூ. 800க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு பைக்கு ரூ. 200 விலை உயா்வு ஏற்பட்டுள்ளது, உளுந்து 5 கிலோ பை ரூ.1000 /-இந்தாண்டு ரூ. 1300 வரை விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விதைகள் விலை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு செல்வதால் கடந்தாண்டு விற்பனை செய்த விலையையே இந்தாண்டும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதை நிறுவனங்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தவிர மேற்கண்ட வீரிய ஒட்டுரக விதைகளை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதை தவிா்த்து தமிழகத்திலேயே தனியாா் விதைப்பண்ணைகளை தொடங்கி விதைகள் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற கட்டமைப்பை அரசு உருவாக்கி தர வேண்டும். தவிர விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க