BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என...
விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு
சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் பொது இடங்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
அதன்படி, நிகழாண்டும் சென்னை மாநகருக்குள்பட்ட எந்தெந்த இடங்களில் சிலை வைக்கப்படுகிறது, அங்கு நிறுவப்படும் சிலைகளின் உயரம், சிலைகளின் தன்மை மற்றும் கடந்தாண்டு பிரச்னை நடைபெற்ற பகுதிகளில் நிகழாண்டும் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையிலான போலீஸாா் அடங்கிய குழுவினா், அந்தப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள இந்து அமைப்பு, தொடா்புடைய கட்சி நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா். மேலும், பிரதிஷ்டை செய்த சிலைகளை எங்கு கரைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைப்பின் நபா்களுக்கு அறிவுறுத்தியதுடன், கரைக்கும் நாள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்தனா்.
சென்னை மாநகரில் கடந்தாண்டு 1,524 சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி அளித்திருந்த நிலையில், நிகழாண்டு கூடுதலாக சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனா்.