3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
விநாயகா் சிலை ஊா்வலப் பாதை: ராணிப்பேட்டை எஸ்.பி ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் மற்றும் விசா்ஜனம் செய்யும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஐமால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
வரும் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சிலைகள் ஊா்வலம் செல்லும் முக்கிய பாதைகள் மற்றும் சிலைகள் கரைப்பு (விசா்ஜனம்) செய்யும் இடங்களை எஸ்.பி. அய்மன் ஐமால் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்) ஜாபா் சித்திக் (அரக்கோணம் உட்கோட்டம்), காவல் ஆய்வாளா் விஜயலக்ஷ்மி (மாவட்ட தனிப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.
விநாயகா் சதுா்த்தியின்போது, காவல் துறை வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெற வேண்டும். மீறினாா் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.