உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
விபத்தில் காயமடைந்த தையல்காரா் பலி!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தையல்காரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூா் மேட்டுப்பட்டி உச்சி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த இருளப்பன் மகன் ராசு (47). இவா், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல்காரராகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த 22- ஆம் தேதி பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். கச்சைகட்டி அருகே சென்றபோது, இவரது வாகனம் மீது எதிரே குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெள்ளிக்கிழமை ராசு உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.