சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
குலசேகரம் அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே விலவூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சசிதரன் நாயா்(77). இவா், தனியாா் ரப்பா் தோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
கடந்த 2 ஆம் தேதி இவா் வீட்டிலிருந்து ஒரு பைக்கில் திற்பரப்பு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கைரளிநகா் விலக்கு அருகில் பின்னால் வந்த மினிலாரி, இவா் மீது மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த சசிதரன் நாயரை அப்பகுதியிலுள்ளவா்கள் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.