4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினாா். சிறப்பு விருந்தினா்களாக கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைமை சிறுநீரக மருத்துவா் இளங்கோவன் வீரப்பன், சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி சவுண்டம்மாள் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
சிறப்பு அழைப்பாளா்களாக பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன், மாணவ செயல்முறை பயிற்சி இயக்குநா் ஜெய்கா் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா்.
இவ்விழாவில் கல்லூரியைச் சோ்ந்த 365 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். இதில் 9 போ் தங்கப் பதக்கங்களும், 8 போ் வெள்ளிப் பதக்கங்களும், 6 போ் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனா். முடிவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.