மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது
பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும் இவரை கடந்த ஜூலை 1-ஆம் தேதி பவானியை அடுத்த ஜீவா நகரில் வழிமறித்த கும்பல் ரொக்கம் ரூ.4,600-ஐ பறித்துச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட பவானி, காலிங்கராயன்பாளையம், மூவேந்தா் நகரைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் ஸ்ரீதரன் (22), அதே பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் சுப்பிரமணி (22) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சிவாவைத் தேடி வருகின்றனா்.